மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

'அசுரவதம்' சில்லென்ற அனுபவம்!

'அசுரவதம்' சில்லென்ற அனுபவம்!

அசுரவதம் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ள நந்திதா ஸ்வேதா அந்த படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

வணங்கா முடி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ள நந்திதா அசுரவதம் படப்பிடிப்பை முடித்துள்ளார். படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்துள்ள அவரது பேட்டியில், “பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் நிறைய கதாபாத்திரங்களை செய்துவிட்டேன். தற்போது சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இந்த படம் பற்றிய அதிக தகவல்களை நான் கூற முடியாவிடினும் இதில் பணியாற்றிய அனுபவம் அருமையாக இருந்தது. கொடைக்கானல், திண்டுக்கல் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

கதாநாயகன் - கதாநாயகி தொடர்பான வழக்கமான கிளிஷேக்கள் எதுவும் இல்லை. பொறுப்புமிக்க பெண்ணாக சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சசிகுமார் சாரோடு இணைந்து நடிக்க விரும்பினேன் அது இந்த படம் மூலம் நிறைவேறியது. நடு இரவில் கொடைக்கானல் மலை உச்சியில் நடந்த படப்பிடிப்பு அனுபவத்தை மறக்கமுடியாது. பனியின் காரணமாக அடுத்திருப்பவர் பேசுவதைக்கூட கேட்க முடியாது. அங்குள்ள மக்கள் மாலை நேரத்திற்குப் பின் வெளியில் செல்லமாட்டார்கள். ஆனால் ஜீப் மூலமாகவும், நடந்தும் காட்டிற்குள் சென்று நடு இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். குடும்பக் கதையான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும்” என்று கூறியுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018