மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

பயிர்க் கொள்முதலுக்கு புதிய திட்டம்!

பயிர்க் கொள்முதலுக்கு புதிய திட்டம்!

அடுத்த காரிஃப் பருவத்திற்கு முன்னதாக பயிர் கொள்முதலுக்கான புதிய வழிவகைகள் கண்டறியப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு நேற்று (பிப்ரவரி 2) அவர் அளித்துள்ள பேட்டியில், "தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை உரிய விலைக்குக் கொள்முதல் செய்வதில் தோல்வியடைந்துள்ளன. இதனால் நடப்பு பட்ஜெட்டில் கொள்முதல் விலை 1.5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பருப்புகள், எண்ணெய் வித்துகள், பருத்தி போன்ற பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அளித்து விவசாயிகளைக் காக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் எல்லாப் பொருள்களையும் குறைந்தபட்ச ஆதார விலைக்கே கொள்முதல் செய்வதில் பல்வேறு சாவல்கள் நிலவுகின்றன. தற்போது இதற்கான வழிகளைக் கண்டறிந்து செயல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அடுத்த காரிஃப் பருவத்திற்குள் விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலையை அளிக்க மத்திய, மாநில அரசுகள் புதியத் திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்தும்" என்றார்.

நாடு முழுவதும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இந்தத் திட்டம் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே முறையாகச் செயல்படுகிறது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கீழாக பயிர் விலை சரிந்தது. இதையடுத்து இம்முறை பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 3 பிப் 2018