மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

லஞ்சம்: கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது!

லஞ்சம்: கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது!

பேராசிரியர் பணியிடத்துக்கு லஞ்சம் பெற்றதாகக் கூறி கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணி நியமனத்துக்குத் துணைவேந்தர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி சுரேஷ் என்பவரிடம் பணி நியமனத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ரொக்கமாகவும் மீத தொகையைக் காசோலையாகவும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் காவல் துறையினர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் இன்று (பிப்ரவரி 3) காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் துணைவேந்தர் கணபதி வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர்.

துணைவேந்தர் கணபதியைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இன்று மதியத்துக்கு மேல் துணைவேந்தரை லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 3 பிப் 2018