மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மஞ்சுவாரியர் படத்திற்கு எதிராக வழக்கு!

மஞ்சுவாரியர் படத்திற்கு எதிராக வழக்கு!

மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஆமி' என்ற படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனது 67வயதில் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய புகழ்பெற்ற இந்திய கவிஞரும் எழுத்தாளருமானவர் கமலாதாஸ் என்கிற மாதவிக்குட்டி. இவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சி கடந்த பல மாதங்களாக நடைபெற்றது. முதலில் வித்யாபாலன் நடிக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மலையாளப் பட இயக்குநர் கமல் இயக்கத்தில் கமலாதாஸ் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ஆமி படத்தில் மாதவிக்குட்டியின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் திரிக்கப்பட்டு உள்ளதாகவும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மாதவிக்குட்டி இஸ்லாம் மதத்திற்கு மாறியதன் பின்னணியில் 10 லட்சம் டாலர் அவருக்கு தெரியாமல் வாங்கப்பட்டதாகவும், பிற்காலத்தில் இதை தெரிந்து கொண்ட மாதவிக்குட்டி வருத்தப்பட்டதாகவும் பரவலாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் கமல், “பிரபலமான ஒருவரது வாழ்க்கையை படமாக எடுக்கும்போது பல பிரச்னைகள் வரும், அவற்றை எதிர்நோக்க நான் தயாராக இருக்கிறேன். எந்த எதிர்ப்பு வந்தாலும் அதை நாங்கள் சரி செய்வோம்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 3 பிப் 2018