மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

விடிய விடிய பள்ளியில் காத்திருந்த பெற்றோர்கள்!

விடிய விடிய பள்ளியில் காத்திருந்த பெற்றோர்கள்!

தமிழகத்தில் தமிழை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. ஆனால், தங்கள் குழந்தைகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படித்தால்தான் ஆங்கிலத்தை நன்றாக பேசுவார்கள் என எண்ணி தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் படையெடுக்கின்றனர். மருத்துவம், என்ஜினியரிங் சீட்டுக்கு கல்லூரி வாசலில் காத்திருந்த காலம்போய், இப்போது எல்கேஜி, யூகேஜி படிப்புகளுக்கே காத்திருக்கும் காலம் வந்துவிட்டது.

இந்நிலையில், தருமபுரியில் ப்ரி.கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி விண்ணப்பங்களைப் பெற தனியார் பள்ளி முன்பு பெற்றோர்கள் கொட்டும் பனியில் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்தனர்.

தருமபுரியில் தனியார் நர்சரி பிரைமரி பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆகிய மூன்று வகுப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று (பிப்ரவரி 3) முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் நேற்றிரவு முதல் பள்ளி முன்பு வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர்.

”இந்தப் பள்ளி ஒழுக்கம் மற்றும் கட்டணத்தில் சிறந்து விளங்குவதால் இங்கு குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்பது எங்களது ஆசை. இங்கு 200 இடங்கள் மட்டுமே உள்ளன. அதனால்தான் இங்கு காத்திருக்கிறோம்” என பெற்றோர்கள் கூறினர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 3 பிப் 2018