மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட் போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட் போன் பரிசு!

சென்னை புத்தகக் காட்சியைத் தொடர்ந்து திருப்பூரில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியிலும் நமது மின்னம்பல வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போன் பரிசுத் திட்டம் நடைபெற்றுவருகிறது.

திருப்பூர் பின்னல் புத்தக அறக்கட்டளை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா பத்மினி கார்டனில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 145 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அரங்கு எண் 130இல் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலம் பதிப்பக புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசியல், பொருளாதாரம், கலை, சமூகம் என பல பிரிவுகளில் நுட்பமான கட்டுரைகளை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நமது மின்னம்பலம் வெளியிட்டுள்ளது. வாசகர்களிடையே நமது புத்தகங்களுக்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதை திருப்பூர் புத்தகக் காட்சியில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. நேற்றைய தினம் திருப்பூர் குமரன் கல்லூரி மாணவிகள் நமது அரங்கிற்கு வருகை தந்து ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

ஆர்வமிக்க ஏராளமான நம் மின்னம்பலத்தின் வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டதுதான் ஸ்மார்ட் போன் பரிசுத் திட்டம். இதன் மூலம் வாசகர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மார்ட் போன் பரிசு பெறுகின்றனர். அந்தவகையில் நேற்றைய தினம் (பிப்ரவரி 2) அவினாசி அருகேயுள்ள பூண்டியைச் சேர்ந்த கயல்விழி பேனசோனிக் P-99 மாடல் ஸ்மார்ட் போனைத் தட்டிச் சென்றார். இவர் திருப்பூர் ஏவிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படித்துவருகிறார். ஜூனியர் விகடன் ஆசிரியர் ப.திருமாவேலன் அவருக்கு பரிசினை வழங்கி கௌரவித்தார். திருப்பூர் மஹிமா இன்டர்நேஷனல் குழுமம் சார்பாக மாரிமுத்து இந்தப் பரிசை அளித்துள்ளளார். இன்றைய குலுக்கலில் வெல்லப்போவது நீங்களாகவும் இருக்கலாம்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 3 பிப் 2018