மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

நிலக்கரி: உற்பத்தி தொய்வு; விற்பனை உயர்வு!

நிலக்கரி: உற்பத்தி தொய்வு; விற்பனை உயர்வு!

இந்திய பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா ஜனவரி மாத உற்பத்தியில் இலக்கை அடைவதில் சற்றுப் பின்னடைவைக் கண்டுள்ளது. இருப்பினும் இந்தியாண்டு தொடக்கம் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் நிலக்கரி விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம் 80 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமாகவும் கோல் இந்தியா நிலவுகிறது.

இதுகுறித்து பிப்ரவரி 1ஆம் தேதி பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2017-18 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தியில் இலக்கை அடைய இயலாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜனவரியில் 56.69 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரியில் 63.32 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது" என்று கூறியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 3 பிப் 2018