மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

கணவன்: நான் கொஞ்சம் பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.

மனைவி: ம்ம்ம்... சரி.

(ஒரு முக்கால் மணி நேரம் கழித்து)

மனைவி: ஏங்க... எங்கே இருக்கீங்க? பேங்க் வேலை முடிஞ்சுதா?

கணவன்: இப்பதான் வேலை முடிஞ்சு வெளியில் வரேன்.

மனைவி: அப்ப சரி... வரும்போது எனக்கு பிரஷர் மாத்திரை ஒரு மாசத்துக்கானது வாங்கிட்டு வந்துடுங்க.

(பதினைந்து நிமிடங்கள் கழித்து)

மனைவி: ஏங்க... எங்கே இருக்கீங்க? மருந்து வாங்கிட்டீங்களா?

கணவன்: இப்பதான் வாங்கிட்டு வெளியில் வரேன்.

மனைவி: அப்ப சரி... வரும்போது ஒரு லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்க. (கணவன் பாலையும் வாங்கிய பின் ஓர் இடத்தில் ஹாயாக அமர்ந்து வடை, டீ இவற்றை ருசித்துக்கொண்டிருக்க, மறுபடியும்)

மனைவி: ஏங்க... பால் வாங்கிட்டீங்களா? இப்ப எங்கே இருக்கீங்க?

கணவன்: எல்லா வேலையும் முடிஞ்சுது. ஆவின் பாலகத்துல ஒரு டீ குடிச்சுக்கிட்டிருக்கேன்.

மனைவி: அதானே பார்த்தேன். கரண்டு கம்பத்தைப் பார்த்த ஏதோ மாதிரி உங்க வண்டி, கடையைப் பார்த்ததுமே தன்னால நின்னுடுமே!

கணவன்: (சற்றே எரிச்சலுடன்) சரி, இப்ப என்ன பண்ணணுங்கிற?

மனைவி: அங்கே உளுந்து வடையும், உருளைக்கிழங்கு போண்டாவும் நல்லா இருக்கும். ஆளுக்கு ரெண்டு ரெண்டு வாங்கிட்டு வாங்க.

(கணவன் வீடு வந்து சேர்ந்தது மனைவிக்குத் தெரியவில்லை. அந்தளவுக்குச் சமையலறையில் பிசி.)

மனைவி: ஏங்க... எங்கே இருக்கீங்க? வந்துட்டீங்களா?

கடுப்பான கணவன்: பெட்ரூம்ல டிரஸ் மாத்திக்கிட்டிருக்கேன்டீ! இப்ப என்ன?

மனைவி: (அதே கடுப்பான தொனியில்) வந்ததும் வராததுமா அங்க உட்கார்ந்துகிட்டு ஃபேஸ்புக்கு நோண்டாதீங்க. வந்து தேங்காயை ஒடச்சு, துருவி குடுங்க. சாம்பாருக்கு வேணும்.

கணவன் தேங்காயை எடுத்தவாறே மனசுக்குள்: பேசாம சிவன் கொடுத்தாப்ல உடம்புல பாதியைக் கொடுத்திருக்கலாம். எங்கே போனாலும் கூடவே வந்து என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிடுவா. வெளியில எங்கே போனாலும் மனுஷன் இங்கேதான் இருப்பான்னு எப்படி கண்டுபிடிக்கிறாள்னே தெரியலை. ஒருவேளை எனக்கே தெரியாம என்னோட ஒடம்புல GPRS Chip வெச்சிருப்பாளோ!

Moral 1: The God says, wherever you go, I’m there!

Moral 2: கட்டின மனைவி கடவுளுக்குச் சமம்!

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 3 பிப் 2018