மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

பெண்கள் இன்றும் பழகுநர் உரிமம் பெறலாம்!

பெண்கள் இன்றும் பழகுநர் உரிமம் பெறலாம்!

பெண்கள் பழகுநர் உரிமம் பெற தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் இன்று(பிப்ரவரி 3) செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். எனவே, மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்( பிப்ரவரி 24) முதல் தொடங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் ஜனவரி 22ஆம் தேதி முதல் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் பிப்ரவரி 5ஆம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் மேற்கூறிய இடங்களில் அளிக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பெண்கள் ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெறுவது அவசியம் என்பதால், ஆர்டிஓ அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018