மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

கேரளா அணியின் த்ரில் வெற்றி!

கேரளா அணியின் த்ரில் வெற்றி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரில் நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா அணி, புனே அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 4ஆவது சீசன் 2017 நவம்பர் மாதம் தொடங்கி, இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் புனேவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி மற்றும் எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின. முன்னதாக இரண்டு அணிகளும் கொச்சியில் விளையாடிய போட்டி (1-1) சமனில் முடிவடைந்தது.

நேற்றைய போட்டியிலும் இரண்டு அணிகளும் சமபலம் கொண்டு விளையாடினர். முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் 58ஆவது நிமிடத்தில் கேரளா அணி வீரர் ஜெக்கிசாந்த் சிங் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். அவரைத் தொடர்ந்து புனே வீரர் எமில்லியானோ 78ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் போட்டி 1-1 என சமனானது. 90 நிமிடங்கள் முடிந்த பின்னரும் இரண்டு அணிகளும் வேறு கோல் அடிக்காத காரணத்தால் இந்தப் போட்டியும் சமனில் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கேரளாவின் சி.கே.வினோத் கோல் பாக்ஸிற்கு வெளியே இருந்து லாவகமாக பந்தினை கோல் போஸ்டிற்குள் அடித்தார். இதனால் கேரளா அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 3 பிப் 2018