மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

அண்ணா நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி!

அண்ணா நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி!

பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணா, 1969ஆம் ஆண்டு காலமானார். அவருடைய நினைவு நாளை திமுக, அதிமுக என இரு கட்சிகளும் அனுசரித்துவருகின்றனர். இந்த ஆண்டு அண்ணாவின் 49ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என்று இரு கட்சிகளும் அறிவித்தன.

அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மதுசூதனன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பேரறிஞர் அண்ணாவில் நினைவு நாளை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 3) தமிழகம் முழுவதுமுள்ள 315 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் சபாநாயகர் தனபால் கலந்துகொள்கிறார். கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலாஜா சாலையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அண்ணா சதுக்கம் வரை அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 49ஆவது நினைவுநாளில் அவர் துயிலுமிடும் நோக்கி கழகத்தினர் அமைதிப் பேரணி நடத்தி,மலரஞ்சலி செலுத்தினோம்.அவர் வலியுறுத்திய மாநில சுயாட்சி,மொழி உரிமை கொள்கைகளுக்கு இன்று அச்சுறுத்துதல் ஏற்பட்டாலும் அவற்றை வென்றெடுக்க அவரது நினைவுநாளில் உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக காலை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்த ஸ்டாலின், முரசொலி பத்திரிகையில் அண்ணா நினைவு நாள் குறித்த செய்தியைக் காட்டினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 3 பிப் 2018