மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

புகைப்படக் கலைஞர்களுக்காக ஒரு கருவி!

புகைப்படக் கலைஞர்களுக்காக ஒரு கருவி!

சிறந்த தெளிவான புகைப்படங்களை எடுப்பதற்குப் பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய கருவி ஒன்றினை Aurga என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது.

பொதுவாகப் பலருக்கும் புகைப்படம் எடுப்பதில் விருப்பம் உண்டு. விலை உயர்ந்த கேமராக்ககளை கொண்டு புகைப்படங்களை எடுக்க முயற்சி செய்தும், கேமராக்களின் தொழில்நுட்பம் குறித்து சரிவர அறியாதததால் துல்லியமான படங்களை எல்லோராலும் எடுக்க இயலாது.

அதற்கு உதவும் வகையில் Aurga என்ற நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட, கேமராவுடன் இணைத்துக்கொள்ளும் புதிய கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவியானது ஒரு இடத்தின் தன்மையை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் தானாக கேமராவின் அமைப்புகளை (செட்டிங்) மாற்றம் செய்துகொள்ள உதவுகிறது.

அது மட்டுமின்றி ஸ்மார்ட் போன்களின் வசதியுடன் கேமராவைத் தொடாமல் புகைப்படத்தை எடுக்கவும் இந்தக் கருவி பயன்படுகிறது. இந்த கருவியைப் பொருத்திய பின்னர் எடுக்கும் புகைப்படங்களை நேரடியாக இணையத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அதனால் ஸ்டோரேஜ் குறித்த கவலை தேவையில்லை. இந்தப் புதிய கருவியானது iso, exposures, aperture போன்றவற்றினை மாற்றம் செய்துகொள்ள உதவுகிறது.

இந்தப் புதுமையான கண்டுபிடிப்பு புதிதாக புகைப்படம் எடுப்பவர்களுக்கு உதவும் வகையில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மே மாதம் இந்தக் கருவி விற்பனைக்கு வெளியாகும் என Aurga நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 3 பிப் 2018