மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு!

தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு!

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை 2016ஆம் ஆண்டு மார்ச், ஜூன், ஜூலை மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் இடைநிலைக் கல்வியில் முழுமையாகத் தேர்ச்சி பெற்று இரண்டாண்டு கால இடைவெளியைப் பூர்த்தி செய்த தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்குச் சென்று டிசம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, “பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழித் திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்ற விவரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018