மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி!

மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி!

மீனாட்சிஅம்மன் கோயிலில் இன்று (பிப்ரவரி 3) காலை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று (பிப்ரவரி 2) இரவு பூஜைகள் முடிந்து, நடை சாத்தப்பட்ட நிலையில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள கடைகள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர்கள் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக தல்லாகுளம் மற்றும் பெரியார் நிலையம் பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணிநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டபோதிலும், 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. இந்த நிகழ்வின் காரணமாக ஆயிரம் கால் மண்டபத்தின் மேற் கூரையில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தீவிபத்து நிகழ்ந்த கிழக்கு கோபுர வாசலைத் தவிர்த்துப் பிற வாசல்கள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மின்னம்பலம் சார்பாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத்திடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட போது, “நான் தினமும் காலை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி நடைப்பயிற்சி செய்வது வழக்கம். விபத்து காரணமாக வழக்கத்துக்கு மாறாக அப்பகுதி இன்று பதற்றத்துடன் காணப்படுகிறது. கிழக்கு கோபுர வாசலைத் தவிர மற்ற வாசல்கள் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயில் வளாகத்திற்குள் கடை அமைப்பது தொடர்பான அதிகாரம் அனைத்தும் கோயில் நிர்வாகத்திடமே உள்ளது. தற்போது நிர்வாகம், பணத்திற்கு ஆசைப்பட்டு விதிமுறைகளை மீறி நிறைய கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கே இந்த விபத்திற்கு முழு காரணம். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 3 பிப் 2018