மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

ஆரோவில் பொன்விழாவில் பிரதமர்!

ஆரோவில் பொன்விழாவில் பிரதமர்!

ஆரோவில் பொன்விழாவில் பங்கேற்கப் புதுச்சேரி வருவதைப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார் என அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது ஆரோவில் சர்வதேச நகரம். 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று இது தொடங்கப்பட்டது. ஆரோவில் தொடங்கப்பட்டு, இந்த மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இதனையொட்டி, ஆரோவில் நிர்வாகம் பொன்விழா கொண்டாடும் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இதில் கலந்துகொள்ளப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆரோவில் பொன்விழாவில் பிரதமர் பங்கேற்பார் என்று, நேற்று (பிப்ரவரி 2) புதுச்சேரி மாநில பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன் தெரிவித்திருந்தார். இதனை இன்று உறுதி செய்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

புதுச்சேரியிலுள்ள கதிர்காமம் கனகன் ஏரி சுத்தப்படுத்தப்பட்டு, படகு சவாரி செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதனை, இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார் கிரண் பேடி. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலப் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பிரதமர் மோடி ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்வதாகத் தெரிவித்தார் கிரண் பேடி.

“பிரதமர் மோடி வருகை தொடர்பான ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் நாராயணசாமியோடு கலந்து ஆலோசித்தேன். பிரதமரின் நிகழ்ச்சிகளை இறுதி செய்ய தலைமைச் செயலாளர் டெல்லி சென்றுள்ளார்” என்று அவர் கூறினார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018