மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

பிளேஆஃப் வாய்ப்பு: போராடும் சாம்பியன்!

பிளேஆஃப் வாய்ப்பு: போராடும் சாம்பியன்!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் கொல்கத்தாவில் இன்று (பிப்ரவரி 3) நடைபெறவிருக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் பெங்களூரு எஃப்.சி அணியும் மோத உள்ளன.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். எனவே, அனைத்து அணிகளும் கடுமையாகப் போராடி வருகின்றன. அதன்படி இன்று நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இந்த சீசனில் புதுமையாக இணைந்துள்ள பெங்களூரு அணி, இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி எட்டு வெற்றிகளுடன் 24 புள்ளிகளைப் பெற்று பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. ஆனால், நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று 12 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இனி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் கொல்கத்தா அணி பிளேஆஃப் சுற்றைப் பெற குறைந்த அளவே வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து போட்டிகளிலும் முழு மூச்சுடன் விளையாட வேண்டும்.

இன்று போட்டி நடக்கவிருக்கும் கொல்கத்தா மைதானத்தில் இதுவரை ஐந்து போட்டிகளில் கொல்கத்தா அணி விளையாடி உள்ளது. அதில் ஒரு போட்டியில் மட்டுமே கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் மோதிய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 3 பிப் 2018