மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ!

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று (பிப்ரவரி 2) இரவு பத்து மணி அளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு கடைகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. விசேஷ நாளான தை வெள்ளிக்கிழமை அன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தீப்பிடித்து எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று இரவு பத்து மணி அளவில் கோயில் நடை சாத்தபட்டு கதவுகள் பூட்டப்பட்டு விட்டன. இந்த நிலையில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அருகே இருக்கும் கடைகளில் திடீரென தீப்பிடித்தது. கோயிலுக்குள் இருந்து புகையும் வாடையும் வெளிப்பட்டதால் வாசலில் இருந்தவர்கள் போலீஸுக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் நேற்று இரவு தீயை அணைக்க முயற்சித்தனர். பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் இருந்த கடையில் பிடித்த தீ மளமளவென பரவியது. அதனால் வடக்கு பிராகாரம் வழியாகவும் தீயணைப்பு வண்டிகள் கொண்டு வரப்பட்டன. கோயிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட கடைகள் ஆக்கிரமித்திருப்பதால் தீயணைப்பு வண்டிகள் கோயிலை நெருங்குவதற்குள் கடும் சிரமம் ஏற்பட்டது.

ஆயினும் இரவு 11 மணி முதல் போராடி சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் கோயிலுக்குள் பிடித்த தீ அணைக்கப்பட்டது. ஆயினும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த கடைகள் எரிந்ததோடு மட்டுமல்லாமல் மண்டபம் முழுக்க கரிபடிந்து காணப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ என்றதும் மதுரை பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கோயில் வாசலில் கூடினர். அவர்கள், “தை வெள்ளிக்கிழமையும் அதுவுமா மீனாட்சி அம்மன் கோயில்ல தீ பிடிச்சதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றனர்.

மதுரை ஆட்சியர் வீர ராகவ ராவ், “நடை சாத்திய பிறகு தீ விபத்து ஏற்பட்டதால் நல்லவேளையாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. காலை வழக்கம்போல வழிபாடுகள் மேற்கொள்ளலாம்” என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அறநிலையத் துறை உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இரவு மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் திரண்டிருந்தனர்

தகவல் நள்ளிரவே அறநிலையத் துறை அமைச்சர் மூலம் முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தெய்வ நம்பிக்கை அதிகம்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டாராம். உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 3 பிப் 2018