மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

சின்னசாமி நீக்கம்: தினகரன் ஆதரவு காரணமா?

சின்னசாமி நீக்கம்: தினகரன் ஆதரவு காரணமா?

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், கூட்டத்துக்குப் பிறகு அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஆர்.சின்னசாமி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் தொடங்கியது. மாவட்ட அமைப்புகளை அதிகப்படுத்துதல், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட வாரியாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகிறபோதிலும் மாவட்டச் செயலாளர்கள் வட்டத்தில் பலரும் தினகரனுடன் தற்போதும் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, “உங்களில் பலரும் தினகரனுடன் இன்னும் தொடர்பில் உள்ளீர்கள் என்பது தெரியும். இது இனியும் தொடர்ந்தால் கட்சியில் இருந்து நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை” என எச்சரிக்கை விடுக்கும் தோணியில் கூறியுள்ளார். இதனால் மாவட்டச் செயலாளர்களில் சிலர் கலக்கமடைந்துள்ளனர்.

சின்னசாமி நீக்கம்

இதனிடையே, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அதில், “அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பதவியில் இருந்து ஆர்.சின்னசாமி நீக்கப்படுவதாகவும் புதிய செயலாளர் நியமிக்கப்படும் வரை, தொழிற்சங்கப் பேரவை பணிகளைக் கவனிக்க யு.ஆர்.கிருஷ்ணன், தாடி. ம.இராசு, க.சங்கரதாஸ் தலைமையிலான தற்காலிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஆர்.சின்னசாமி, தினகரன் அணியில் உள்ள முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின்போது அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் உத்தரவுக்கு ஏற்ப அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களைப் பேருந்துகளை இயக்கவிடாமல் சின்னசாமி தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து: வெளிப்படும் உட்கட்சிப் பூசல்! என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில்தான் தற்போது சின்னசாமி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 3 பிப் 2018