மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

விதிவிலக்கு இல்லாத விஜய் ஆண்டனி

விதிவிலக்கு இல்லாத விஜய் ஆண்டனி

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை விரும்பும் விஜய் ஆண்டனி அடுத்ததாக காக்கிச் சட்டையுடன் களமிறங்குகிறார்.

‘நான்’ (2012) படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதற்குத் தனிப்பெயர் பெற்றவர். மேலும், தமிழ் சினிமாவில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம்வந்து கொண்டிருக்கிறார். நான், சலீம், பிச்சைகாரன் போன்ற வெற்றிகரமான திரைப்படங்களைக் கொடுத்துள்ள அவர், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் மார்ச் 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் காளி திரைப்படத்தைத் தொடர்ந்து ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முதல் முறையாகக் காக்கிச் சட்டையில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இந்தப் படத்தை கணேசன் என்பவர் இயக்குகிறார். காளி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரிச்சர்டு.எம்.நாதன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். “ரிச்சர்டின் ஒளிப்பதிவு இத்திரைப்படத்துக்கு முதுகெலும்பாக அமையப் போகிறது” என்று விஜய் ஆண்டனி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானதை அடுத்து, படப்பிடிப்பு பிப்ரவரி 7 அன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுவாக போலீஸ் கதாப்பாத்திரம் என்றாலே முரட்டுத்தனமான தோற்றம், கம்பீரமான குரல் என்பதெல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பதியவைத்திருக்கும் ஒரு பிம்பம். ஆனால், விஜய் ஆண்டனியைப் பொறுத்தவரை அவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் முரட்டுத்தனமான சண்டைக்காட்சிகள் இருக்காது. வசனங்களைக்கூட சத்தமாகப் பேசமாட்டார். எனவே, அவர் போலீஸ் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்திருப்பது வழக்கத்துக்கு மாறான ஒன்று என்பதுடன், எப்படிப்பட்ட போலீஸ் கேரக்டரை ரசிகர்களுக்குக் கொடுக்கப் போகிறார் என்பதும் கவனிக்க வேண்டியவை. ஆனால், ஹீரோ என்றாலே போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கைக்கு இவரும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துவிட்டார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018