மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

ஊதிய உயர்வு, ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியர்கள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்தp போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 2.57 சதவிகித ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை விடுத்தும், 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது. அதனால், கடந்த மாதம் 23ஆம் தேதி சி.ஐ.டி.யு மற்றும் பி.எம்.எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து கடந்த மாதம் 22ஆம் தேதி தொழிலாளர் ஆணையரிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தையில், பிப்ரவரி 12ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், தமிழக அரசு சில நாள்களுக்கு முன்பு மின்வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளது.

இது ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் எனக் குற்றம் சாட்டும் மின்வாரிய ஊழியர்கள், திட்டமிட்டபடி பிப்ரவரி 12ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் நிறைவேற்றப்படாத பட்சத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்தப் போராட்டத்தில் பத்து தொழிற்சங்கங்கள் ஈடுபடுகின்றன. இது காலவரையற்ற போராட்டமாக மாறவும் வாய்ப்பு உள்ளது என மின்வாரிய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 3 பிப் 2018