மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

நீதிபதி லோயா மரண வழக்கு ஒத்திவைப்பு!

நீதிபதி லோயா மரண வழக்கு ஒத்திவைப்பு!

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 2) உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி திருமணம் ஒன்றுக்காக நாக்பூர் சென்றிருந்த சமயத்தில் திடீரென மரணமடைந்தார். மாரடைப்பால் நீதிபதி மரணமடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித் ஷா வழக்கில் லோயா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்

லோயாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரிகையாளரான பி.ஆர்.லோன் என்பவர், லோயாவின் மரணம் குறித்து சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜனவரியில் நடந்த விசாரணையின்போது, லோயா மரணம் குறித்து, பொதுநல வழக்கு தொடர்ந்த மனுதாரர்களிடம், அனைத்து ஆவணங்களையும், ஒரு வாரத்துக்குள் மகாராஷ்டிர அரசு கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018