மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

மொபைல் போன்களுக்கான வரி உயர்வு!

மொபைல் போன்களுக்கான வரி உயர்வு!

மத்திய பட்ஜெட் அறிவிப்பில், இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான சுங்க வரி 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான சுங்க வரியானது தற்போதுள்ள 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான விலை 4 சதவிகிதம் வரையில் உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆப்பிள் ஐபோன்களின் விலை சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டு மொபைல்போன் உற்பத்தி 90 சதவிகிதமாக உயரும் என்று அருண் ஜேட்லி கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018