மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

சென்னையில் ரூ.9 கோடி மதிப்பிலான சிகரெட் பறிமுதல்!

சென்னையில் ரூ.9 கோடி மதிப்பிலான சிகரெட் பறிமுதல்!

சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.9 கோடி மதிப்புள்ள இந்தோனேசியா சிகரெட்டுகளைச் சுங்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

இறக்குமதி வரி அதிகம் என்பதால் வெளிநாட்டு சிகரெட் கடத்தி வரப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து, சென்னை துறைமுகத்தில் உள்ள கன்டெயினர்களில் அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 2) தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள 9 கன்டெயினர்களில் இருந்த உரப்பெட்டிகளைச் சோதனை செய்தபோது, அதில் இந்தோனேசியா சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்த சிகரெட்டுகளைச் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 9 கோடி ரூபாய். இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் ஈரான் நாட்டிலிருந்து இந்த சிகரெட்டுகள் சென்னைக்குக் கடத்திக் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

மேலும், திண்டுக்கல்லைச் சேர்ந்த கிசான் என்கிற ஏற்றுமதி நிறுவனம் ஜிப்சம் மாவு என்ற பெயரில், கன்டெயினர்களில் சிகரெட் கடத்தி கொண்டுவரப்பட்டதாகவும் தகவல் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018