மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா: தேங்காய் பர்பி!

கிச்சன் கீர்த்தனா: தேங்காய் பர்பி!

மைக்ரோவேவ் உபயோகித்து மூன்றரை நிமிடங்களில் ருசியான தேங்காய் பர்பி செய்யலாம். இதோ... சனிக்கிழமை ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் - 1 கப்

ஏலக்காய் - 3

முந்திரிப் பருப்பு - 8

சர்க்கரை - 1 கப்

பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* தேங்காயை நைசாகத் துருவிக்கொள்ளவும்.

* ஏலக்காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சிறிது சர்க்கரையுடன் சேர்த்து, நைசாகப் பொடித்துக்கொள்ளவும்.

* முந்திரிப் பருப்புகளைச் சிறு துண்டுகளாக ஒடித்துக்கொள்ளவும்.

* எல்லாப் பொருள்களையும் நன்றாகக் கலந்து ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் மூடாமல் வைக்கவும்.

* மூன்றரை நிமிடங்கள் ‘மைக்ரோ ஹை’யில் வைக்கவும். நடுவில் ஒருமுறை லேசாகக் கிளறிக் கொடுக்கவும்.

* மைக்ரோவேவிலிருந்து எடுத்த கையோடு, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமமாகப் பரப்பவும்.

* சிறிது சூடு ஆறத் தொடங்கியதும், நெய் தடவிய கத்தியால் மூன்று செமீ சதுரக் கட்டிகளாக வெட்டவும்.

மூன்றரை நிமிடங்களில் தேங்காய் பர்பி தயார்.

கீர்த்தனா சிந்தனைகள்:

‘Sorry’ என்பது மட்டுமல்ல... ‘சாப்பிட்டியா?’ என்பதும் ஒருவகையில் சமாதான வார்த்தைதான்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018