மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

விஜய்யின் தீவிர ரசிகை நான்: அதுல்யா

விஜய்யின் தீவிர ரசிகை நான்: அதுல்யா

“முதலில் விஜய்யின் தீவிர ரசிகை; அதன் பின்னர்தான் நடிகை” என்று நடிகை அதுல்யா தெரிவித்துள்ளார்.

காதல் கண் கட்டுதே, ஏமாலி என அதுல்யா நடித்து இரண்டு படங்கள்தான் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் இரண்டே படங்களின் மூலம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் நாயகிகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் அதுல்யா. காதல் கண் கட்டுதே படத்தில் இயல்பான கேரக்டரில் நடித்து கவனம்பெற்ற அதுல்யா, ஏமாலி படத்தில் துணிச்சலான கேரக்டரில் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறார். ஏமாலி திரைப்படம் நேற்று (ஜனவரி 2) வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

வி.இசட். துரை இயக்கியிருக்கும் இதில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், ரோஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதுல்யா கலந்துகொண்டார். இதில் இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் இயக்குநர் தன்மேல் வைத்திருந்த நம்பிக்கை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

எல்லா நடிகைகளிடமும் கேட்கப்படுவது போல அதுல்யாவிடமும் நீங்கள் யாருடைய ரசிகை என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. சினிமாவில் வருவதற்கு முன்பே விஜய்யின் தீவிர ரசிகை. அதற்குப் பிறகுதான் நான் நடிகை” என்று வெளிப்படையாகப் பேசினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 3 பிப் 2018