பணிபுரியும் பெண்களுக்கான பட்ஜெட்!


2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில், பணிபுரியும் பெண்களுக்கான வருங்கால வைப்பு நிதி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாகப் பெண்களும் ஆண்களும் தங்களது சம்பளத்திலிருந்து 12 சதவிகிதத்தைச் செலுத்துகின்றனர். இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள் தங்களது சம்பளத்திலிருந்து செலுத்தும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களது வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளத்தின் அளவு உயரும் என்பதால் பணிபுரியும் பெண்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.