மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

பியூட்டி ப்ரியா: ஜீன்ஸுக்கேற்ற டாப்ஸ்!

பியூட்டி ப்ரியா: ஜீன்ஸுக்கேற்ற டாப்ஸ்!

ஜீன்ஸ் பிரபலமாக இருக்கும் தற்போதைய நிலையில் அதற்கு எடுப்பாகப் போடப்படும் மேலாடையான டாப்ஸ்தான் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அமையும்.

பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் வேலைப்பாடு செய்யப்பட்டது, சமிக்கி, மணிகள் வைத்து தைக்கப்பட்ட டாப்ஸ் என இது நீண்டுகொண்டே செல்லும்.

பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உடல் அளவுக்கேற்ப சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். பெண்களுக்கென தற்போது பல சட்டைகள் வருகின்றன. முழுக்கை மற்றும் பாக்கெட்டுகளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங்களில் அதுபோன்ற சட்டைகளைக் கறுப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம். அல்லது, சட்டையைவிடக் கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன. அவை பல்வேறுவிதங்களிலும் பல விலைகளிலும் கிடைக்கின்றன.

எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் இதுபோன்ற டாப்ஸ்களை வாங்கும்போது அதற்கேற்ற வலைப் பின்னல் ஷால்களையும் வாங்கி அணிந்துகொள்வதும் ஃபேஷன் ஆகிவிட்டது.

கை நீளம், கை குட்டை அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்துக்கேற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கி உங்களுக்கேற்ற உடையை தேர்ந்தெடுங்கள். ஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்துக்கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம்சுளிக்க வைக்காமலும் இருப்பது நலம்.

உடல் அதிக பருமன் கொண்டவர்கள் நீண்ட டாப்ஸ்களையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும்.

ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை அணியலாம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 3 பிப் 2018