மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

ஒலிம்பிக்: ஊக்க மருந்துக்கு ஊக்கமளிப்பதா?

ஒலிம்பிக்: ஊக்க மருந்துக்கு ஊக்கமளிப்பதா?

ரிச்சர்டு மெக்லரன் அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சொச்சி மாகாணத்தில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக (மாதிரிகள் மாற்றப்பட்டதாக) சந்தேகப்பட்ட பலருக்குக் கடந்த டிசம்பர் மாதம் வாழ்நாள் தடைவிதித்து ஆணையிட்டது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

இந்த ஆணையை எதிர்த்து ரஷ்ய வீரர்கள் பலரும் விளையாட்டுகளுக்கான சர்வதேச நடுவண் நீதிமன்றத்தை நாடியபோது, இவர்களில் பலர் ஊக்க மருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் சரிவர நிரூபிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் சந்தேகம் இருப்பதால், 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு மட்டும் தடைவிதிக்கலாமே தவிர, வாழ்நாள் தடைவிதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது.

நடுவண் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்த ஒலிம்பிக் கமிட்டி “சர்வதேச நடுவண் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஊக்க மருந்து தடுப்பு முயற்சியில் தேக்கத்தை ஏற்படுத்தும். இதை உதாரணமாக வைத்து பின்நாளில் ஊக்க மருந்து பயன்படுத்துபவர்கள் எளிதாகத் தப்பிக்கக்கூடிய வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் நாங்கள் விளையாட்டை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்க விரும்புகிறோம். தீர்ப்பு கையில் கிடைத்ததும், எதையெல்லாம் சந்தேகத்துக்கிடமான ஆதாரங்கள் என நீதிமன்றம் சொல்கிறதோ, அவற்றுக்கான சரியான ஆதாரத்தைத் தேர்ந்தெடுத்து மேல்முறையீடு செய்வோம்” என்று கூறியிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018