மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

ரஜினி மன்றம்: புதிய நிர்வாகிகள் நியமனம்!

ரஜினி மன்றம்: புதிய நிர்வாகிகள் நியமனம்!

ரஜினி மக்கள் மன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், அதற்கு முன்னோட்டமாக ரசிகர் மன்றத்தை செம்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். முதலில் ரஜினி மன்றம் என்ற பெயரில் இணையதளப் பக்கமும், செயலியும் தொடங்கப்பட்டது. மன்றத்தின் லோகோவாக பாபா முத்திரையும் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து ரசிகர் மன்றம் என்ற பெயரை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றப்பட்டது. இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் பல்வேறு மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், ரஜினி நியமித்துள்ள குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. முதன்முறையாக வேலூர் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அங்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். தென் மாவட்டங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ரஜினி மன்றத்தின் லோகோவில் இருந்த பாம்பு சின்னம் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடியிலும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்டச் செயலாளராக ஏ.ஜெ.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். மாவட்ட இணைச் செயலாளராக ஜெ.சக்தி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்களாக டி.எஸ்.பி.எஸ்.பெரிய சுவாமிநாதன், எம்.முகம்மது கனி ஞானியப்பா, ஆர்.ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இளைஞர் அணிச் செயலாளராக ஆர்.வேல்முருகன், மீனவர் அணிச் செயலாளராக என்.அருண் ஆனந்த், விவசாய அணிச் செயலாளராக கந்த சிவசுப்பு, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக எம்.விஜய் ஆனந்த், மகளிர் அணிச் செயலாளராக எம்.ராஜலெட்சுமி, வழக்கறிஞர் அணிச் செயலாளராக எம்.செந்தில் ஆறுமுகம் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக கே.ஜெயக்கொடி உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 3 பிப் 2018