மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

ஹெல்த் ஹேமா: எதனால் வருகிறது புற்றுநோய்?

ஹெல்த் ஹேமா: எதனால் வருகிறது புற்றுநோய்?

புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம்.

போதுமான உடற்பயிற்சியின்மை, சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அமைகின்றன. தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது.

சுகவீனமான உடம்பு, நோய்கள் தங்கும் கூடாரமாகிவிடும். உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால்தான் நோய்களின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.

அதிகப்படியாக மதுபானங்களைக் குடிப்பது கல்லீரல் மற்றும் உணவுப்பாதை ஆகியவற்றில் புற்றுநோய்வரக் காரணமாக அமைகிறது. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதது குடலில் புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது. உப்புக்கண்டம் போன்ற பதப்படுத்திய இறைச்சி, உணவுப் பொருள்களை உண்பது இரைப்பை புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன

நிலத்திலிடப்பட்ட உரங்கள், பதம் செய்யப்பட்ட உணவு வகைகள், புகைப்பிடித்தல், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மருந்து வகைகள், புகையிலையை வாயில் அடக்கி அதிகமாகச் சுவைத்தல், தாய்ப்பால் கொடுக்காமல் புறக்கணித்தல், இனிப்பு, சாக்லேட் போன்றவற்றைப் பயன்படுத்துதல், காற்றில் மகரந்த தூள்கள் கலந்து சுவாசிக்கும்போது உடலினுள் செல்லுதல், சுற்றுப்புறங்கள் தூய்மையுடன் இல்லாமலிருத்தல், எக்ஸ்ரே போன்ற ஒளிக்கதிர்கள், சோப்பு, அழகு சாதனங்களாலும் கோபம், பயம், ஆசை போன்ற காரணங்களினாலும் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அதன் வழியாகவும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

நாளை புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்னும் விரிவான பல தகவல்களைக் காணலாம்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 3 பிப் 2018