மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

சுகாதாரம்: அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

சுகாதாரம்: அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

அமெரிக்காவின் சுகாதார நலத் திட்டத்தைவிட இந்தியாவின் ‘மோடி கேர்’ சுகாதாரத் திட்டம் வெற்றிமிக்க ஒன்றாக இருக்கும் என்று அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த பிறகு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “அமெரிக்காவின் ஒபாமா கேர் திட்டத்தைவிட இந்தியாவின் மோடி கேர் திட்டம் சிறப்பாகச் செயல்படும். நம் நாட்டின் சுகாதாரக் கொள்கைகள் எப்போதும் மிகவும் உறுதியானவையாகவே இருக்கும். எனவே, நாம் இங்கு 10 கோடிப் பேருக்கு சுகாதாரத் திட்டத்தைக்கொண்டு சேர்த்தாலே அது அமெரிக்காவின் ஒபாமா கேர் திட்டத்தை மிஞ்சியதாக இந்த உலகமே ஏற்றுக்கொள்ளும். மோடி கேர் சுகாதாரத் திட்டம் வாயிலாகக் குறைந்தது இந்தியாவின் 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

அமெரிக்காவின் நோயாளி பாதுகாப்பு மற்றும் கட்டுபடியாகும் பராமரிப்புச் சட்டம்தான் ‘ஒபாமா கேர்’ என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தைவிட இந்தியாவின் மோடி கேர் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று அருண் ஜேட்லி கூறுகிறார். அருண் ஜேட்லியால் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம்தான் மோடி கேர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வரையிலான சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 3 பிப் 2018