மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

அரையிறுதியில் பி.வி.சிந்து

அரையிறுதியில் பி.வி.சிந்து

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பெனிட்ரிக் கார்லஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் பி.வி.சிந்து நுழைந்துள்ளார்.

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடர் ஜனவரி 31இல் தொடங்கியது. அதில் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை பெனிட்ரிக் கார்லஸ் உடன் மோதினார். முதல் செட்டை 21-12 என எளிதில் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டில் 19-21 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சிந்து 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அமெரிக்காவின் பிவிவென் ஜாங் உடன் மோதினார். இந்தப் போட்டியில் பிவிவென் ஜாங் 21-10, 21-13 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பைப் பெற்றார். தோல்வியைத் தழுவிய சாய்னா தொடரிலிருந்து வெளியேறினார். அதேபோல் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரினும் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். நேற்று நடைபெற்ற போட்டியில் ஹாங்காங் வீராங்கனை நன் யி சேங் உடன் மோதிய அவர் முதல் செட்டில் 12-21 என மோசமான தோல்வியைத் தழுவினார். ஆனால், இரண்டாவது செட்டில் நீண்ட நேரம் போராடிய அவர் 19-21 என புள்ளிகளை பெற்று தோல்வியடைந்தார்.

இந்திய வீரர் ப்ரநீத்தும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி வெளியேறினார். அவர் காலிறுதியில் தைவான் வீரர் டின் சென் சோ உடன் மோதி 15-21, 13-21 என்ற நேர்செட்களில் தோல்வியைத் தழுவினார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 3 பிப் 2018