மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

பால் பொருள்கள் தயாரிப்புகளில் தொற்றுநோய்க் கிருமிகள்!

பால் பொருள்கள் தயாரிப்புகளில் தொற்றுநோய்க் கிருமிகள்!

பால் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளில் தொற்றுநோய்க் கிருமிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சுமார் 12 மில்லியன் பால் பவுடர் திரும்பப் பெறப்பட்ட உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தயாரிப்புகளில் தொற்றுநோய்க் கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கடந்த பத்தாண்டுகளாகவே தனது நிறுவனத் தயாரிப்புகள் சிலவற்றில் நோய்க் கிருமிகள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த வருடம் சால்மோனெல்லா (salmonella) என்ற கிருமி நோய்த்தொற்று பரவுவதாகத் தகவல் வெளியானது. இந்தக் கிருமி நோய்த்தொற்றால், பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக ஐரோப்பா கண்டம், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சுமார் 12 மில்லியன் பால் பவுடர் பெட்டிகள் திரும்பப் பெற உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாக்டலிஸ் நிறுவனம் சந்திக்கவுள்ள இந்தப் பிரச்னையால் இந்த நிறுவனத்துக்குப் பல நூறு மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும். மேலும், 47 நாடுகளில் தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்ட இந்நிறுவனத்தின் பிரான்ஸ் கிளைகளில் மட்டும் 15,000 பேர் வேலை செய்கிறார்கள். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் 17 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

இந்த சால்மோனெல்லா கிருமியால் நோய்த்தொற்று ஏற்பட்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப்பிடிப்பு, வாந்தி மற்றும் பயங்கர நீரிழப்பு ஏற்படும். சில நேரங்களில் குழந்தைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படலாம். பால் தரும் விலங்குகளிடமிருந்து பரவும் இந்த நோய்க் கிருமியால் ஏற்படும் நோய் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தற்போது பிரச்னைக்குக் காரணமாக உள்ள வடமேற்கு பிரான்ஸில் அமைந்துள்ள நிறுவனம்தான் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கும் காரணமாக இருந்தது. பாலை உலர்த்தும் அமைப்புகள் ஒன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே இப்பிரச்னைக்குக் காரணமாக அமைந்ததால், லாக்டலிசுக்கு சொந்தமான அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நோய்த்தொற்றினால் 146 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதில் குறைந்தது 38 குழந்தைகளின் பிரச்னைக்கு லாக்டலிஸ் (Lactalis) பால்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 3 பிப் 2018