மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

பசு பாதுகாப்பு மசோதா வாபஸ்!

பசு பாதுகாப்பு மசோதா வாபஸ்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பசு பாதுகாப்பு மசோதாவை நேற்று (பிப்ரவரி 2) தாக்கல் செய்தார் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. மத்திய அமைச்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறிது நேரத்துக்குப் பின்பு அந்த தனிநபர் மசோதாவை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு பசுவதை குறித்த விவாதம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வுகளை உண்டாக்கியது. சில பகுதிகளில் இது விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தியது. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலைக்கு ஆளாகினர். மனிதர்கள் மற்றும் பசுக்களின் வாழ்வு குறித்து, சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வேகமாகப் பரவின. பால் தருவதை நிறுத்திய பிறகு பசுக்களின் வாழ்வு கொடூரமாக முடிந்துவிடக் கூடாது என்ற உத்தரவாதத்தை தர வேண்டுமென்று இந்துத்துவா அமைப்புகள் கோரி வந்தன.

இந்த நிலையில், பசு பாதுகாப்பு மசோதாவை மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவாகத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார் பாஜகவைச் சேர்ந்த எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. சொன்னது போலவே, நேற்று மதியம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அந்த மசோதாவை அறிமுகம் செய்தார். இறைச்சிக்காகப் பசுக்களைக் கொல்பவர்களுக்கு தூக்கு தண்டனை உட்பட, கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு பல வேலைகளில் ஈடுபட்டுள்ளதால், இந்த மசோதாவைத் தான் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த மசோதா தொடர்பாக காரசாரமான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது.

பால் தருவதை நிறுத்தியபிறகு பசுக்களைப் பராமரிப்பதற்குத் தன்னார்வ வரி விதிக்க வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார் சுவாமி. சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜாவேத் அலி கான், பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்றார். அதோடு, பசு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளுடனான தொடர்பை இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டுமென்றார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 3 பிப் 2018