மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

டிஜிட்டல் திண்ணை: எதிர்க்கும் அமைச்சர்களுக்கு டெல்லி எச்சரிக்கை!

டிஜிட்டல் திண்ணை:  எதிர்க்கும் அமைச்சர்களுக்கு டெல்லி எச்சரிக்கை!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“எடப்பாடி அரசை இனியும் ஆதரித்தால் பாஜகவுக்குக் கெட்ட பெயர்தான் உண்டாகும் என்பது டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களின் கருத்தாக இருக்கிறது. அதனால்தான் அதிமுக அரசு மீதான பாசம் என்பது படிப்படியாகக் குறைந்துவிட்டது. நீதிமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வந்துவிடும் என்பதுதான் பாஜக போடும் கணக்கு.

அதே நேரத்தில் பாஜக மீது எடப்பாடி அரசும் வெறுப்பை காட்ட ஆரம்பித்திருக்கிறது. ‘ஆர்.கே.நகரில் பணம் என்பதை தாண்டி தினகரன் ஜெயிக்க ஒரே காரணம், அவர் பாஜகவை எதிர்த்துச் செய்த அரசியல்தான். நம்மை பாஜகவின் பிரதிநிதியாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அந்த வளையத்திலிருந்து நாம் வெளியே வந்தால்தான் நம்மை மக்கள் ஏத்துக்குவாங்க. பாஜக மீது ஒட்டுமொத்த மக்களும் அதிருப்தியில் இருக்காங்க. நாம பாஜகவை ஆதரிப்பதால், அந்தக் கோபம் நம்ம மீதுதான் திரும்பும். அதனால பிஜேபி அரசு செய்யும் தவறுகளை நாம் சுட்டிக்காட்டணும். அவங்களும் நம்மை எதிர்ப்பதில்தான் குறியாக இருக்காங்க...’ என்று எடப்பாடியிடம் சில அமைச்சர்கள் சொல்லி இருக்கிறார்கள். எடப்பாடியிடம் இருந்து க்ரீன் சிக்னல் வந்த பிறகுதான் பிஜேபிக்கு எதிராகக் கருத்து சொல்ல ஆரம்பித்தார்கள் அமைச்சர்கள்.

‘தேசியக் கட்சிகளால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது’ என்று வெளிப்படையாகவே கொளுத்திப் போட்டார் துணை முதல்வர் பன்னீர். செல்லூர் ராஜுவும் அவரது பங்குக்கு, ‘வாக்குறுதிகளை எல்லாம் மத்திய அரசு நிறைவேற்றியதா எனப் பட்டியல் போடலாமா?’ எனக் கேட்டார். ஜெயகுமாரும் எதிர்த்தார். வேலுமணியும் எதிர்த்தார். இப்படியாக பிஜேபிக்கு அதாவது மத்திய அரசுக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார்கள் அமைச்சர்கள். அமைச்சர்களின் பேச்சுகள் எல்லாம் உடனுக்குடன் டெல்லிக்கு நோட் போட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. என்று முடிந்தது வாட்ஸ் அப் அனுப்பிய மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018