மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

ரஜினிக்குப் பெண்கள் பலம்: உளவுத் துறை சர்வே!

ரஜினிக்குப் பெண்கள் பலம்: உளவுத் துறை சர்வே!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து, தனது ரசிகர் மன்றத்தையும் மக்கள் மன்றமாக மாற்றிவிட்டார். இப்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட ரீதியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள்.

அசுர வேகத்தில் தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டு சுமார் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார்கள். ரஜினியின் அரசியல் என்ட்ரி மற்ற அரசியல் கட்சியினருக்கு பயத்தை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினி வருகையால் தங்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரும்பியிருக்கிறார். ஏற்கனவே 1996இல் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வர் ஆக்கினால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினி. அதேபோல இப்போது சிஸ்டம் சரியில்லை என்று சொன்னதன் மூலம் அரசின் மீதான தனது அதிருப்தியை வெளிக்காட்டினார். மேலும் ரஜினி ஆன்மிக அரசியலே தன் பாதை என்றும் சொல்லியிருக்கிறார். ரஜினியின் வருகையால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா, ரஜினிக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்களா என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் விதமாக மாநில உளவுத் துறை சில வாரங்களாகவே சர்வேயில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த சர்வே டீமில் இருந்த உளவுத் துறையினர் சிலரிடம் பேசினோம். “ரஜினிகாந்த் என்ற பிம்பம் திரையில் நம்பர் ஒன் ஆக இருந்ததை ரசித்த பல அரசியல் புள்ளிகள், அவர் அரசியலுக்கு வந்ததும் அரண்டு போயிருப்பது உண்மைதான். ரஜினியின் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்று பல அரசியல் தலைவர்கள் கேள்வி கேட்டுவருகிறார்கள். ஆனால் ரஜினி இன்ன கொள்கை என்று அறிவிக்காமலேயே மக்களுக்கு அவர் மேல் ஈர்ப்பு பெருகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் எடுத்த சர்வேயில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பிருந்த இளைஞர்கள் ஆதரவு அவருக்கு தற்போது இல்லை. காரணம் ரஜினி ரசிகர்கள் எல்லாருக்கும் இப்போது வயதாகிவிட்டது. அதே நேரம் பல இளம் நடிகர்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துவரும் பட்சத்தில் இளைஞர்கள் பலம் ரஜினிக்கு கிடைக்க வழி உள்ளது.

பெண்கள் பலம்!

இளைஞர்கள் பலம் இப்படி என்றால் பெண்களின் ஆதரவு ரஜினிக்குக் கூடியிருக்கிறது. ரஜினியின் இயல்பான தோற்றம், ஆபாசமில்லாத அவரது நடிப்பு, தாய், தந்தை, குடும்பத்தை முதலில் பாருங்கள் என்று அவர் இளைஞர்களுக்கு வழங்கும் அறிவுரை ஆகியவை ரஜினியைப் பற்றிப் பெண்களுக்கு மிகப் பெரிய நல்லபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரஜினிக்கான பெண்கள் பலம் கூடியிருக்கிறது’’ என்கிறார்கள் சர்வே எடுத்த டீமில் இருக்கும் உளவுத் துறையினர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018