மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சிம்பு - த்ரிஷா விளக்கம்!

சிம்பு - த்ரிஷா விளக்கம்!

சிம்பு, வடிவேலு, த்ரிஷா ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகாருக்கு, இதுவரை பதில் வராத நிலையில், மூன்று பேரும் தயாரிப்பாளர் சங்கத்தில் விளக்கம் தந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

திரைப் பிரபலங்கள் சிம்பு, வடிவேலு, த்ரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் 3 தயாரிப்பாளர்கள் புகார் அளித்திருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார்.

வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததாகவும், அதில் திடீரென்று நடிக்க மறுத்து வடிவேலு விலகிவிட்டதாகவும், இதனால் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் குற்றம் சாட்டி இருந்தார். அதேபோல ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்துக்கு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென்று படத்தில் நடிக்க முடியாது என்று கூறி அவர் விலகிவிட்டார். இதனால் த்ரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிம்பு, வடிவேலு, த்ரிஷா ஆகிய மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து நடிகர் சங்கத்துக்கு பதில் அனுப்பியுள்ளனர். த்ரிஷா அனுப்பி உள்ள விளக்கக் கடிதத்தில், “சாமி-2 படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்தப் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். இதற்காகப் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து திருப்பி அனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

சிம்பு அளித்துள்ள பதிலில், “அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன். படம் வெளியாகும்போது என் மீது குற்றம் சொல்லாமல் இப்போது கூறுவது உள்நோக்கம் கொண்டது” என்று கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018