மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

செல்போன் திருடர்களால் பறிபோன மாணவர் உயிர்!

செல்போன் திருடர்களால் பறிபோன மாணவர் உயிர்!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடிஐ மாணவர் ரஞ்சித்தை செல்போன் திருடர்கள் கத்தியால் குத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் ஐடிஐ படித்துவந்தவர் ரஞ்சித். அவரது தந்தை இரு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் சகோதரி, தாய் சரஸ்வதியுடன் வசித்துவந்தார். கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நண்பரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்றுவிட்டு இரவு 12.40 கடைசி ரயிலில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி 100 மீட்டர் தொலைவில் ரஞ்சித் மொபைல் போனைப் பயன்படுத்திக்கொண்டே சென்றுள்ளார். அப்போது அங்கு யமஹா பைக்கில் வந்தவர்கள் ரஞ்சித்தின் மொபைலைப் பிடுங்க முயன்றுள்ளனர்.

பின்னர் ரஞ்சித்தின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர். வலி தாங்க முடியாமல் வேகமாக வீட்டை நோக்கி ஓடிய ரஞ்சித் அபு தெரு பகுதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நள்ளிரவில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். நுங்கம்பாக்கம் முதல் கிண்டி வரையுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியில் மர்ம நபர்கள் ரஞ்சித்தை பைக்கில் துரத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன

பின்னர் வேறு இரு சிசிடிவி காட்சிகளில் மர்ம நபர்கள் சென்ற பைக் பதிவாகியுள்ளது. அதன்படி சிசிடிவி காட்சிகளின் படங்களை எடுத்து தனிப்படை போலீசார் அனைத்துக் காவல் நிலையத்துக்கும் அனுப்பியுள்ளனர்.

இந்த புகைப்படத்தின் பேரில் வடபழனி காவல்துறை ஆய்வாளர் சந்துரு மூவரும் வடபழனியில் இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் நபர்களிடம் செல்போன் பறிக்கும் கும்பல் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது பெயர் கார்த்திகேயன், சாலிகிராமம் நவீன்குமார், சிவகணேஷ் என்பதும், சென்னை முழுவதும் பல இடங்களில் மொபைல் போன்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

சென்னையில், அடையாறு, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் மொபைல் போன்களும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுவந்தன. தற்போது மொபைல் திருடர்களால் மாணவர் ஒருவரின் உயிர் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 2 பிப் 2018