மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

வீடியோ கேமால் விபரீதம்!

வீடியோ கேமால் விபரீதம்!

சீனாவில் 20 மணி நேரம் இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள சைபர் கபே பிரவுசிங் சென்டரில் இளைஞர் ஒருவர் கடந்த மாதம் 27ஆம் தேதி மாலை வீடியோ கேம் விளையாடத் தொடங்கினார். விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் உணவு, நீர் அனைத்தையும் மறந்து மறுநாள் மதியம் வரை அவர் விளையாடியுள்ளார். வீடியோ கேம் விளையாடும்போது பாத்ரூமுக்குச் செல்வதைத் தவிர்த்து மற்ற எதற்கும் அங்கிருந்து நகரவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அவர் சுயநினைவை இழந்து உட்கார்ந்த நிலையிலேயே இருக்கையில் மயங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பின்னர், கை, கால்கள் அசைவின்றி இருந்த அந்த இளைஞரை மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

“அவன் சுயநினைவை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. அவனால் நகர முடியவில்லை. நாங்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்தோம்” என அருகிலிருந்த அவர் நண்பர் தெரிவித்தார். மேலும் அந்த இளைஞர் போதைப்பொருள் எதுவும் உட்கொண்டாரா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018