மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

பாஜக ஆட்சியில் ஊழல் இல்லையா?

பாஜக ஆட்சியில் ஊழல் இல்லையா?

பாஜக ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும், ஆனால் அதனை பாஜகவினர் உடனே மறைத்துவிடுவதாகவும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றம் சாட்டினார்.

மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீது பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இந்த பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு என்று விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டிவருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள நெல்லை வந்த காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, " தற்போது பாஜக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்தும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டவை. அவற்றின் பெயரை மட்டும் மாற்றித் திரும்பவும் கொண்டுவருகின்றனர். முன்பு பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் மீண்டும் கொண்டுவருகின்றனர் என்றார்.

தொடர்ந்து குஷ்பு, "பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை என்று யார் சொன்னது? வியாபம் ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது ஊழல் குற்றம் சுமத்தி அங்கு பேசிவருகின்றனர். பாஜகவினர் எந்த ஊழலாக இருந்தாலும் அதனை மறைத்துவிடுகின்றனர். யார் அவர்களுக்குச் சாதகமான வசதியை செய்து தருகிறார்களோ அவர்களுக்கு அரசில் ஏதாவது ஒரு பதவியும் வழங்கிவிடுகின்றனர்"என்றும் குற்றம் சுமத்தினார்.

குஜராத் தேர்தலுக்கு முன்பு அமித் ஷா மகனுடைய வருமானம் அதிகரித்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய குஷ்பு, அதுவும் ஊழல்தானே, அதைப் பற்றிப் பேசினால் உடனே மறைத்துவிடுகிறார்கள். ஆக இது ஊழலற்ற அரசாங்கம் என்பது வெறும் பெயரளவில்தான் உள்ளது. ஊழலற்ற நிர்வாகம் என்றால் ராஜஸ்தானில் வெற்றிபெற்றிக்க வேண்டுமே, ஏன் முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

“மக்கள் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்போது ஜனாதிபதி, ஆளுநர்கள் சம்பளத்தை உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு 250 சதவிகிதம் வரை சம்பள உயர்வு அளித்துள்ளனர். இந்த சம்பள உயர்வு இருந்தால்தான் எம்.எல்.ஏ.க்கள் வீட்டில் சாப்பிட முடியும் என்பதில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே பட்ஜெட்டை வரவேற்றுள்ளார். அவருக்கு வேறு வழியில்லை" என்றும் அவர் கூறினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 2 பிப் 2018