தல Vs தளபதி டிவிட்டர் போர்: அப்டேட் குமாரு

சினிமா நடிகர்கள்ல இருந்து எல்லா பிரபலங்களையும் அண்ணாந்து பார்த்துகிட்டு இருந்த நம்ம மக்களை இந்த டிவிட்டர் பேஸ்புக் வந்து மாத்திவுட்ருச்சு. எந்த பிரபலத்தையும் தனக்கு பிடிச்சா லைக் போட்டு ஹாய் ஹவ் ஆர் யூன்னு பேசிடுறாங்க. படம் நல்லா இல்லைன்னா, வித்தியாசமா கருத்து சொன்னா உடனே திமுதிமுன்னு போய் அவங்க பேஜ்ல போய் எல்லா லாங்குவேஜ்லயும் திட்டி தீர்த்திடுறாங்க. புதுசு புதுசா மீம்ஸ் போட்டு சம்பந்தப்பட்டவங்களையும் டேக் பண்ணிடுறாங்க. இப்படித்தான் இன்னைக்கு தானா சேர்ந்த கூட்டம் பட டைரக்டர் விக்னேஷ் சிவன் கிடந்து முழிச்சுகிட்டு இருக்காரு. டிவிட்டர்ல ஸ்க்ரோல் பண்ணினா அவரை கலாய்ச்ச டிவிட்டா தான் வருது. அதை எல்லாம் சென்சார் பண்ணிட்டு எடுத்துட்டு வந்துருக்கேன். இப்ப இன்னொரு மேட்டரும் சொல்றாங்க. டிவிட்டர்ல என்ன பிரச்சினை போயிட்டு இருந்தாலும் அதை தல - தளபதி சண்டையா சில குரூப்கள் மாத்திடுறாங்களாம். இது நல்ல பிசினஸா இருக்கே..என்னை எதுலயும் கோர்த்து விட்றாதீங்கப்பா..
@Ktnisha294
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நின்றதால் நானும் ஒரு
அரசியல்வாதி தான் - நடிகர் விஷால்
மெரினா பீச்சில் நின்றால் நானும் சிலைதானு சொல்வாரு போலையே
@naatupurathan
நான்கு ஆண்டுகளில் இதுவரை 70 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன -அருண் ஜெட்லி, பட்ஜெட் 2018.
25 லட்சம் பக்கோடா கடைகள், 25 லட்சம் பானிபூரி கடைகள், 25 லட்சம் பீடா கடைகள்னு மொத்தம் 75 லட்சம் வேலைவாப்புகள உருவாக்கிட்டு, 5 லட்சம் கம்மியா சொல்றிங்களே தல...!!!
@thiruja
'ரேசன் கடை'க்கு மூடுவிழா நடத்திட்டு, 'டாய்லெட்டு'க்கு திறப்புவிழா நடத்தறது தான் மோடி பட்ஜெட்.
@Kadharb32402180
பிழையை சரிபடுத்திக் கொள்ள முயற்சி செய்வதில் அவமானம் ஒன்னுமில்லை...!!
@RamoEvsir
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ2 குறைப்பு.
புதிதாக சாலை மீதான வரி லிட்டருக்கு ரூ8 விதிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பாதையில் #இந்தியா
@imparattai
ஏம்பா வடிவேலு கோபத்த குறைக்க மருந்து சாப்டியே, இப்போ பரவால்லயா?
யோவ் எப்பிடி இருந்தா உனக்கென்னயா? போய்யா காலங்காத்தால வந்துட்டானுக விசாரிக்க,!
வேலையப்போய் பாருய்யா!
சாவடிக்கிறானுகளே!
அவ்வ்வ்வ்!
@Rajtalk09
ICU ல இருந்த பொருளாதாரம் தற்போது சாதாரண வாடுக்கு மாற்றப்பட்டுள்ளது - தமிழிசை
அப்பல்லோ மேட்டர் மாதிரி இருக்கு
@SairSairam
இராசி பலன் மீது வைக்கப்படும் நம்பிக்கையை நம் மன பலத்தின் மீது வைத்தால் அதன் பலன் கிடைக்கும்...
@Rajtalk09
ரேசன் கடையை போல, எந்த சூழலிலும் ஒருவரை குறைவாக எடை போடாதீர்கள்
@naaraju
இண்டஸ்ட்ரில எவன் சண்டை போட்டாலும், அதை தல-தளபதி சண்டையா இவிய்ங்களா மடை மாத்திக்கிட்டு கொடூரமா அடிச்சுக்கிறாய்ங்க.
@imparattai
பிம்பிலிக்கி பிலாப்பி, டங்காமாரி, டார்லிங்கு டம்பக்கு, கலாசலா சலசலா, ஒஹம சீயா போன்ற பலவற்றை இனி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சொல்வார்களோ?
நாட்டுல கருத்துசுதந்திரம் காணாமபோச்சுப்பா!
@tparavai
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே ட்ராஃபிக்போலீஸ் கண்டதும் பெல்ட்டிழுப்பதாம் டிரைவர்
@karthik07248268
சனி புடிச்சவன் கூட நிம்மதியா இருப்பான் போல,
சளி புடிச்சவனால இருக்க முடியல.
@ajmalnks
ரஜினி,கமல் உள்ளிட்ட எத்தனை நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் பாஜகவுக்கு பாதிப்பில்லை- வானதி
ஆமா உங்களுக்கு நோட்டாவோட மட்டும்தானே போட்டி.
@madurai_jinna
ஆர்.எக்ஸ் 100 வாங்க ஆசைப்பட்டா.,
சைக்கிள் வாங்கி கொடுக்குது வாழ்க்கை.!
@HAJAMYDEENNKS
ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாம் இப்ப வாட்ஸ்அப் குரூப்லதான் ஒற்றுமையாக இருக்காங்க...!
@udhayamass1
'ஐ போனுக்கு பதிலாக சலவை
சோப்' : பிரபல ஆன்லைன்
வர்த்தக நிறுவனம் மீது புகார்
அடேய் திருடுவதில் தாத்தா
காலத்து டெக்னிக்டா இது
@chandra_kalaS
நம்முடைய சேலரி மெஜேஸ் எப்ப வரும்னு நாம ஆவலா காத்திருக்கிறத விட நாம லோன் வாங்கிய பேங்ககாரங்க தான் ஆவலாக காத்திருக்கிறார்கள்..சேலரி கிரெடிடடுனு வந்ததும் என்ன ஸ்பீடா பிடிக்கிறீங்க பா..
@itzVillan
குடியரசு தலைவருக்கு சம்பளம் உயர்வு
குடிமக்களுக்கு விலைவாசி உயர்வு #ஜெய்பாகுபலி
@banutalks92
வீடு தேடி மது அனுப்பும் திட்டம்
தமிழக அரசு முடிவு...
கடையை எல்லாம் அடைக்குறோம்னு சொல்லிட்டு இப்ப தெரு தெருவா கூவி கூவி விக்க போறாங்களாம்.