மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

ஓவியா களமிறங்கும் களவாணி 2

ஓவியா களமிறங்கும் களவாணி 2

விமல், ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் களவாணி. ஓவியா இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தஞ்சாவூர் வட்டார கிராமப் பின்னணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சற்குணம் அடுத்ததாக இயக்கிய வாகை சூடவா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூல் சாதனை புரியவில்லை. நையாண்டி, சண்டி வீரன் ஆகிய படங்களும் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள ஓவியா மீண்டும் இதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. சிவகார்த்திகேயன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட டைட்டில் லோகோ மூலம் விமல், ஓவியா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 2 பிப் 2018