மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க முடியாது!

வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க முடியாது!

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு இன்று (பிப்ரவரி 2) தெரிவித்துள்ளது.

பட்ஜெட் தாக்கலான பின் மாநிலங்களவையின் முதல் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பது குறித்துக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை என்ன ஆனது என அதிமுக எம்பி சசிகலா புஷ்பா கேள்வி கூட்டத்தில், எழுப்பினார். அவர் கேள்விக்கு மத்திய சட்ட இணையமைச்சர் பிபி.சவுத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்: ”உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது.”

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என 2006ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. 2010ஆம் ஆண்டு, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மதுரை, கோவை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் காலவரையறையற்ற உள்ளிருப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 2012ஆம் ஆண்டு, அரசின் பரிந்துரையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்ற அமர்வு அறிவித்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 2 பிப் 2018