மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

வருமான வரி வரம்பு: ஜேட்லி விளக்கம்!

வருமான வரி வரம்பு: ஜேட்லி விளக்கம்!

சிறிய அளவில் வரி செலுத்துபவர்களுக்கு கடந்த பட்ஜெட்டுகளில் ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த காலத்தில் இருப்பதே தொடரும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது நடுத்தர மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் டெல்லியில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அருண் ஜேட்லி, “இந்தியா முன் தற்போது ஏராளமான சவால்கள் உள்ளன. வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பதில் சிக்கல் உள்ளது. நான் தாக்கல் செய்த கடந்த 4-5 பட்ஜெட்களை நீங்கள் ஆய்வு செய்து பார்த்தால், சிறிய அளவில் வரி செலுத்துபவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பது தெரியவரும்.

ரூ. 2 லட்சமாக இருந்த வருமான வரி உச்ச வரம்பு, ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகட்ட கடன் வாங்கி, திருப்பிச் செலுத்துவதில் ரூ.1.50 லட்சம் வரை விலக்கு இருந்ததை நான் ரூ.2 லட்சமாக உயர்த்தினேன்” என்று கூறியுள்ளார்.

ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கும் வருமான வரி செலுத்துவதை அரசு எளிமையாக்கியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், “சிறிய வரி செலுத்துபவர்களை எடுத்துக்கொண்டால், 50 சதவீத வருவாய்க்கு மட்டுமே வரி செலுத்தினால் போதும், மீதமிருக்கும் 50 சதவீத வருவாய் செலவினமாகக் கருதப்படும்” என்று அவர் விளக்கமளித்தார்.

“ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு 10 சதவீதம் வரியை 5 சதவீதமாகக் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைத்தோம்.

மக்கள் அதிகமானோரை வரி செலுத்தும் வரம்புக்குள் கொண்டுவந்தால்தான், தேசிய நலன் சார்ந்த திட்டங்களுக்கு அரசு செலவிட முடியும். சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவது கவலையளிப்பதாகக் கூறிய அவர், இப்போது வரை அரசு சமாளிக்கும் வகையில்தான் விலை இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018