மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

விக்னேஷ் சிவன் ட்விட்டர் சர்ச்சை!

விக்னேஷ் சிவன் ட்விட்டர் சர்ச்சை!

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் முன்வைத்த விமர்சனத்துக்கு, விக்னேஷ் சிவன் பதிலளித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் தினக் கொண்டாட்டமாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

கௌசிக் எல்எம் (@LMK Movie maniac) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரி மாதம் வெளியான படங்கள் எதுவுமே லாபகரமாக இல்லை. பிப்ரவரி மாதமாவது நல்லபடியாக இருக்கும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அதைக் குறிப்பிட்ட விக்னேஷ் சிவன், “சொல்லிட்டாரு...., எவ்வளவுதான் நாங்கள் கடினமாக உழைத்தாலும் சிலர் இதுபோன்ற அர்த்தமற்ற விமர்சனங்களால் எங்களை ஊக்கமிழக்கச் செய்கின்றனர். அலுவலகத்துக்கு வந்து காசுக்காக கைநீட்டி இரைந்து நின்றுவிட்டு இதையும் செய்கின்றனர். இப்படியான எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களைப் பார்த்தாலே.. விரட்டி விரட்டி*” என்று பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த ட்விட்டால் சர்ச்சை எழுந்தது. இதனால் சில நிமிடங்களிலேயே அவர் அந்த ட்விட்டை நீக்கிவிட்டார்.

அதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு திரைப்படத்தை வசூல் போன்ற எண்கள் அடிப்படையில் அணுகுவது தயாரிப்பாளரின் வேலை. மக்கள் ரசிப்பதற்காக மட்டுமே படத்துக்கு வருகின்றனர். ஒவ்வொரு படத்தையும் ரசித்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் விமர்சகராகிவிட்டனர். அதற்கு அவசியமில்லை. வாழ்க்கை அழகானது, அதனால் நேர்மறையாக அதை எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், விக்னேஷ் சிவன் செய்த ட்விட்டை பலரும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டு கருத்து தெரிவித்துவருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில் நேற்று இரவு முதலே சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கௌசிக் என்பவருக்கு விளக்கமளிக்கும் விதமாக, “பெண்களின் புகைப்படங்களுக்கு லைக் செய்யவும், கமெண்ட் செய்யவும் மட்டுமே உங்களுக்குத் தெரியும். அதனால் அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி குறித்து உங்களுக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படக் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். ஆகையால் அது குறித்து எதுவும் பேச வேண்டாம்” என்று காய்ச்சி எடுத்திருக்கிறர் விக்னேஷ் சிவன்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 2 பிப் 2018