வாக்கி டாக்கி வழக்கு தள்ளுபடி!

வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக காவல் துறை டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகக் காவல் துறையை நவீனப்படுத்தும் விதமாக 2017-18 திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்க ரூ.47.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஒதுக்கீடு செய்த தொகைக்கு மாறாக 4000 வாக்கி டாக்கிகள் வாங்க ரூ.83.45 கோடி வரை ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செந்தில் முருகன் என்பவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,”வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பது, டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, டிஜிபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.