கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா?


ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் நாளை (பிப்ரவரி 3) மோதுகின்றன.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைத் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. அதில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது. இதுவரை நடைபெற்றுள்ள ஜூனியர் உலகக் கோப்பைத் தொடர்களில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தலா மூன்று முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. நாளை நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி 4ஆவது முறையாகக் கோப்பையைத் தட்டிச் சென்று, புதிய சாதனை படைக்கும்.