அப்டேட்டில் அசத்திய ஹானர்!


ஹானர் நிறுவனம் அதன் மாடல்களில் ஒன்றான ஹானர் 7X-ல் அப்டேட் மூலம் ஃபேஸ் அன்லாக் வசதியை கூடுதலாக இணைத்துள்ளது.
ஹானர் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட ஹானர் 7X என்ற மாடல் 4GB RAM, 32GB இன்டெர்னல் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 3340 mAh பேட்டரி சக்தி மற்றும் 6 இஞ்ச் திரையளவுடன் வெளியான இந்த மாடலில் 16MP டூயல் கேமராவும் 8MP செல்ஃபி கேமராவும் இணைக்கப்பட்டிருந்தது. பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதியுடன் அறிமுகமான இந்த மாடலில் புதிதாக பேஸ் அன்லாக் வசதியும் புதிய அப்டேட்டில் இணைக்கப்பட்டுள்ளது.