மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

அனைத்துக்கும் பணம் : உயர் நீதிமன்றம்!

அனைத்துக்கும்  பணம் : உயர் நீதிமன்றம்!

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக மீண்டும் எட்வின் ஜோ நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக பணிபுரிந்த டாக்டர் விமலா ஓய்வு பெற்றதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையின் டீனாகப் பணிபுரிந்த டாக்டர் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, டாக்டர் எட்வின் ஜோ நியமனத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அரசுத் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் தொடர்பான அரசாணையையும் தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்தது; மேலும் மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிக்குத் தகுதியான நபரை 6 வாரங்களில் நியமிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, ரேவதி கயிலைராஜன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு ஜனவரி 31 அன்று நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு வந்தபோது, சில அதிகாரிகள் வேண்டியவர்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகின்றனர் எனத் தெரிவித்தனர். 36 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ரேவதி கயிலைராஜனுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் தகுதி உள்ளதா, இல்லையா; அவரைவிட அனுபவம் குறைந்தவர்களுக்குப் பணி வழங்கப்பட்டதற்குக் காரணம் என்ன, என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து சுகாதாரத் துறை விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பபட்டது.

இந்த நிலையில், இந்த மனு மீண்டும் இன்று (பிப்ரவரி 2) நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோ நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனக் கூறினார். எதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, 9 அம்சங்கள் சாதகமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018