மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சரித்திரப் படத்தில் மீண்டும் ராணா

சரித்திரப் படத்தில் மீண்டும் ராணா

பாகுபலியைப் போன்று சரித்திரப் படமாக உருவாகவிருக்கும் மார்த்தாண்டவர்மா படத்தின் நாயகனாக ராணா நடிக்கவிருக்கிறார்.

எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலியின் இரண்டு பாகங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் வில்லனாக நடித்த ராணா டகுபதி பல தரப்பினராலும் பாராட்டைப் பெற்றார். தற்போது பிரபல இயக்குநர் கே.மது இயக்கத்தில் மார்த்தாண்ட வர்மா ‘தி கிங் ஆப் திருவாங்கூர்’ என்ற புராணக்கதையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனையொட்டி அவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்பு கவடியாறு அரண்மனைக்குச் சென்று மார்த்தாண்டவர்மா அரச குடும்பத்தினரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அரச குடும்பத்தினர், மார்த்தாண்டவர்மா வரலாறு குறித்த 2 புத்தகங்களை ராணாவுக்கு வழங்கியுள்ளனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ராணா, “சரித்திர கதாபாத்திரத்தில், அதுவும் அரசர் மார்த்தாண்ட வர்மா வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடிப்பது மிகவும் பெருமை மிக்கது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018